வேதாரண்யம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய புகாரின் பேரில் இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி தமிழக மீனவர்கள் 9 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.