தினமும் ரூ.250 கோடிக்கு மட்டும் நகைகள் விற்பனையாகிறது

சென்னை: தமிழகத்தில் சுமார் ரூ.1,500 கோடிக்கு தங்க நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தங்கம், வெள்ளி மற்றும் வைர வியாபாரிகள் சம்மே ளனத் தலைவர் ஏ.எஸ்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் அளவிற்கு இந்தப் பாதிப்பு இருப்ப தாக சென்னையில் செய்தியாளர் களிடம் பேசுகையில் அவர் கூறினார். அனைத்துலகச் சந்தையில் இந்தியா தங்கம் வாங்கும் அளவு குறைந்து விட்டதாகக் குறிப்பிட் டுள்ள அவர், தற்போது உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.

அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் தங்க வர்த்தகம் ஏறு முகம் காணும் என்றும், அதுவரை யில் தங்க நகை வியாபாரம் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையே உள்ளது என்றும் அவர் குறிப் பிட்டார். "பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது வர வேற்கத்தக்கதாகும். பழைய நோட் டுகளை வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரையில் வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். எனவே கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளைச் செலுத்தி நகை வாங்கலாம். "இரண்டு லட்சம் ரூபாய் வரை யில் நகை வாங்கினால் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியதில்லை. மாறாக, ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் அந்த எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்," என்றார் ஸ்ரீராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!