தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரத்தை வெளியிடும் திட்டத் தின்கீழ் 10,000 கோடி ரூபாய் இருப்பதாக ஆந்திர நபர் ஒருவர் தெரிவித்த விவரம் போலி என்று தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைத் திருக்கும் கறுப்புப் பணம் மற்றும் அசையாச் சொத்துகள் குறித்து தாமே முன்வந்து தெரிவிப்பவர் களுக்கு கூடுதல் வரியுடன் மன்னிப்பு அளிக்கும் திட்டம் இந்திய அரசால் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டில் இத்திட்டத் தின் கீழ் ரூ.4,164 கோடி மட்டுமே வெளிச்சத்துக்கு வந்த நிலையில் நடப்பாண்டில் அது பன்மடங்காக எகிறியது. கணக்கில் தெரிவிக்காத, கணக்கு காட்ட முடியாத கறுப்புப் பணமோ வெளிப்படுத்த இயலாத அசையாச் சொத்துகளோ இருந் தால் அதனை வருமான வரித் துறையிடம் தெரிவித்து வட்டி யுடன் கூடிய வரியைச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
வங்கியில் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்ட பணம். கோப்புப் படம்