மோசமான விபத்து: 120 பேருக்கு மேல் பலி

இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத் தில் 120க்கு மேற்பட்டோர் உயிரிழந் தனர். வேகமாகச் சென்றுகொண் டிருந்த ரயில் ஒன்றின் 14 பெட்டிகள் திடீரென்று தண்டவாளத்தை விட்டு விலகி ஒன்றோடொன்று மோதி யதில் ஏராளமான பயணிகள் நசுங்கி மாண்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புக்ராயன் என் னும் கிராமத்தில் நேற்று விடியற் காலை 3.10 மணியளவில் இவ் விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தூர்- பாட்னா விரைவு ரயிலின் பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டதற்கான காரணம் உடனடி யாகக் கண்டறியப்படவில்லை என்று ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த வேளையில் விபத்து நிகழ்ந்ததால் தப்பிக்கும் வாய்ப்புப் பலருக்கும் கிடைக்காமல் போனது. மாண்டோரில் பெரும்பா லானோர் ரயில் இயந்திரத்தின் பின்னால் இருந்த இரண்டு பெட்டி களில் பயணம் செய்தவர்கள்.

தண்டவாளத்தை விட்டு விலகி ஒன்றோடொன்று மோதி நசுங்கிய 14 ரயில் பெட்டிகளில் சில. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மக்கள் செயல் கட்சி மாநாட்டு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங்.

11 Nov 2019

‘மக்கள் கட்சியாகவே மசெக இருக்கவேண்டும்’