சிரியாவில் போராளிகள் வசம் உள்ள இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான படைகள் கடுமையாகச் சண்டையிட்டு வரும் வேளையில் அங்கு வசிக்கும் மக்கள் அவதியுற நேர்ந்துள்ளது. அந்நகரின் கிழக்குப் பகுதியை மீட்பதற்காக கடந்த ஒருவார காலமாக அரசாங்கப் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் விமானப் படை பீப்பாய் குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசித் தாக்கியதில் பொதுமக்களில் 27 பேர் உயிரிழந்ததாக இங்குள்ள மனித உரிமை கண்காணிபு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக நீடிக்கும் தாக்குதல்களில் 92 பேர் பலியானதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குடிப்பதற்கு நீர் எடுத்துச் செல்லும் அலெப்பா நகர மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்