மிட் ரோம்னியுடன் டோனல்ட் டிரம்ப் சந்திப்பு

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், திரு மிட் ரோம்னியை சந்தித்துப் பேசியுள் ளார். இருவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு சுமூகமான முறையில் பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது. அந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது. தாங்கள் இருவரும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆழமாக விவாதித்தாகவும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் ரோம்னி கூறினார்.

அந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது என்று திரு டிரம்ப் கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவி திரு ரோம்னிக்கு வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தச் சந்திப்பின்போது அமெரிக்கத் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள மைக் பென்சும் உடன் இருந்தார். 2012 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் திரு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரோம்னி குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். திரு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு அவரை கடுமையாகச் சாடியவர் திரு ரோம்னி. டிரம்ப் அதிபராவதற்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் அவர் குறை கூறியிருந்தார்.

திரு டிரம்பும் மிட் ரோம்னியும் சந்தித்துப் பேசிய பின்னர் இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!