‘தேர்தலில் அம்னோ எதிர்நோக்கும் சவால்’

ஜோகூர்பாரு: அடுத்து வரும் தேர்தலில் அம்னோ கட்சி மோசமான போராட்டத்தை எதிர் நோக்குவதாக ஜோகூர் அம்னோ தலைவர் முகம்மது காலிட் நூர்தின் கூறியுள்ளார். தேர்தலை சந்திக்க அம்னோ தன்னை தயார்படுத்திக்கொள்ள வில்லை என்றால் அதிகாரத்தை இழக்க நேரிடலாம் என்றும் அவர் கூறினார். ஜோகூர் அம்னோ ஆண்டுக் கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய திரு முகம்மது காலிட், அடுத்து வரும் தேர்தல் அம்னோ வுக்கு பெரும் போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்தார்.

நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் சவால்களை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேணடும் என்றும் அவர் சொன்னார். மலேசியாவில் நடக்கும் அரசியல் நிலவரத்தை அம்னோ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஜோகூர் முதலமைச்சருமான முகம்மது காலிட் கூறினார். " நாம் தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வருகிறோம். இதி லிருந்து மீண்டு மக்களின் நம்பிக்கையைப் பெற அம்னோ ஆயத்தமாக இருக்க வேண்டும்," என்று முகம்மது காலிட் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!