318 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

விசாகப்பட்டினம்: இந்தியா தனக்கு நிர்ணயித்த 405 வெற்றி ஓட்டங்க ளைப் பொருட்படுத்தாமல் தன் பாட்டுக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இங்கிலாந்தின் தொடக்க ஜோடி. இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டேர் குக்குடன் இணை சேர்ந்த இளம் வீரர் ஹசீப் ஹமீது, அபாரமான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். இன்று நிறைவுபெறும் இந்தியா= இங்கிலாந்து 2ஆம் டெஸ்ட் போட்டியில் 318 ஓட்டங்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும்.

அது ஓர் இமாலயப் பணி என்றபோதும் இன்றைய இறுதி நாள் ஆட்டம் இரு அணிகளின் மன உறுதிக்கு ஒரு சோதனையாக அமையும் என்பது திண்ணம். இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த இன்னிங்சில் அஸ்வின் 67 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நான்காம் நாள் ஆட்டத்தின் போது நேற்று இங்கிலாந்து அணித் தலைவர் குக் (இடது) அடித்த பந்தை எப்படிப் பிடிப்பது, எப்படி ஓட்டங்கள் விடாமல் தற்காப்பது என்று பார்க்கும் இந்திய அணி வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்