சான்: சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவது அவசியம்

சிங்கப்பூரின் சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவது அவசியம் என்றும் சிங்கப் பூருக்குக் குடியேறும் சீனர்கள் சிங்கப்பூரில் பிறந்த சீனர்களுடனும் மற்ற இனத்தவர் களுடனும் ஒருங்கிணைவது அவசியம் என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார். புதிய சிங்கப்பூர் குடிமக்கள் மன்றமும், சீனாவிலுள்ள பற்பல நகரங்கள் உட்பட சுமார் 75 நாடுகளிலுள்ள வெளிநாட்டுச் சீனர் சங்கங்களும் கூட்டாக அமைத்திருக்கும் உலகளாவிய சமூகக் கட்டமைப்பு நேற்றிரவு செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் உல்லாசத்தளத்தில் அதிகார பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. தேசிய தொழிற் சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளருமான சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

அன்றைய தினம் காலை 11 மணி முதல் தங்களது பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2019

பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் நவம்பர் 21ல் வெளியீடு

தோ பாயோ லோரோங் 5ல் உள்ள புளோக் 64 அருகே குடிபோதையில் கலாட்டா செய்த ஆடவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படம்: சாவ்பாவ்

14 Nov 2019

குடிபோதையில் கத்தியை சுழற்றிய ஆடவர் கைது