அனைத்து பசிபிக் உடன்பாடு: உறுப்பு நாடுகள் சூளுரை

அனைத்து பசிபிக் பங்காளித்துவ வர்த்தக உடன்பாட்டை தொடரப் போவதாக அந்த உடன்பாட்டு நாடுகளின் தலைவர்கள் சூளுரைத் திருக்கிறார்கள். அமெரிக்காவின் புதிய அதிபராக டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து அந்த உடன்பாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

அனைத்து பசிபிக் பங்காளித் துவ உடன்பாட்டு நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய உள் நாட்டு சட்டதிட்டங்களின்படி அந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து முயலப்போவதாக இணங்கி இருக்கிறார்கள். அந்த உடன்பாட்டின் பொருளி யல், உத்திபூர்வ முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார் கள். ஜப்பானியப் பிரதமர் அபேயின் பேச்சாளரான கவாமுரா நேற்று செய்தியாளர்களிடம் இந்த விவரங் களைத் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான பெருவின் லீமா நகரில் ஆசிய பசிபிக் உச்சநிலை பொருளியல் ஒத்துழைப்பு உச்ச மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டையொட்டி நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்கா ஒரு தகவலை வெளியிட்டது. அனைத்து பசிபிக் பங்காளித் துவ உடன்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வை அமெரிக்கா வில் மேம்படுத்த விரும்புவதாக அந்த நாடு குறிப்பிட்டது என்றும் ஜப்பானியப் பிரதமரின் பேச்சாளர் கூறினார்.

அனைத்து பசிபிக் பங்காளித்துவ உடன்பாட்டை ஆதரித்து, தானே அதில் அக்கறை காட்டி, அந்த உடன் பாட்டை இந்த அளவுக்கு மேம்படுத்தி கொண்டுவந்ததற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு (வலது) பிரதமர் லீ சியன் லூங் (இடது) லீமா நகரில் நன்றி தெரிவித்தார். படம்: வர்த்தக தொழில் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!