சஞ்சிதா: இயக்குநருக்கு நன்றி

சஞ்சிதாஷெட்டி நாகரீக உடைக்குத்தான் பொருந்துவார் என்று அனைவரும் நினைத்திருந்தனர். அதைப் பொய்யாக்கும் வகையில் தற்பொழுது அவர் நடித்திருக்கும் படத்தில் நெல்லைப் பெண்ணாக ‘எங்கிட்ட மோதாதே’ என்ற படத்தில் கிராமத்து வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி சொல்கிறார் சஞ்சிதா. ராமு செல்லப்பா இயக்கத்தில் நட்டி என்கிற நடராஜன், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘எங்கிட்ட மோதாதே’. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்