மதுரை: இடைத்தேர்தலில் வாக்க ளிக்க வந்தவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் ஆச்சரி யமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். குறிப்பிட்ட சில வாக்குச் சாவ டிகள் திருமண வீடு போல் வாழை மரத் தோரணங்கள், பலூன்கள், மலர்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று முன்தினம் இடைத்தேர்த லுக்கான வாக்குப்பதிவு நடைபெற் றது. இதையடுத்து அத்தொகு தியில் உள்ள நான்கு வாக்குச் சாவடிகள் முன்மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டு இருந்தன.
வாக்காளர்களைக் கவரவும் வாக்களிப்பது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹார்விப்பட்டி வாக்குச் சாவடி யில் குளிர்சாதன வசதியுடன் ஒளிரும் விளக்குகள், காகித மலர்கள், பலூன்களால் அலங்கா ரம் செய்யப்பட்டிருந்தது.
வாக்காளர்களை வரவேற்க பந்தலில் விரிக்கப்பட்டு இருந்த சிவப்புக் கம்பளம். இதைக் கண்டு பெரும்பாலானோர் ஆச்சரியம் அடைந்தனர். படம்: தமிழகத் தகவல் ஊடகம்