ரூபாய் விவகாரம்: இந்திய நாடாளுமன்றம் முடங்கியது

இந்திய அரசின் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை மீட்கும் பிரச்சி னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளியால் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நேற்றும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கூடியதும் காங்கிரசார் எழுந்து, ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

எதிர்கட்சியினருக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி "விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க் கட்சிகள் முறையாக விவாதம் நடத்த முன்வர வேண்டும். "தேவை இல்லாமல் கூச்சலிட்டு விட்டு சென்று விடுவது ஏன்? உண்மையில் இந்த வி ஷயத்தில் எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்பவில்லை," என்று கூறினார். இந்தியாவில் கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது எனக் கடந்த 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!