நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் சென்ற வார இறுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேசி னார். அவர் தனது அமைச்சரவையில் திறமையானர்களுக்கு இடம் அளிக்க விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். அமெரிக்க முன்னாள் அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி உள்பட பலரை திரு டிரம்ப் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் புதிய நியமினங்கள் பற்றி அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஓய்வு பெற்ற ஜேம்ஸ் மாட்டிஸ் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமிக் கப்படுவார் என்று தெரிகிறது.
நியூ ஜெர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, நியூயார்க் மேயர் ருடி கியுலியானி ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மிட் ரோம்னிக்கு வெளியுறவு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய பதவிகளுக்கு டிரம்ப் முன் மொழியும் பெயர்களை ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் சிலரும் குறை கூறி வருகின்றனர்.