'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதி'க்கு தம்மைப் பற்றி எழுதப்பட்ட நூல்களின் விற்பனை மூலம் நிதியுதவி அளிக்க 21 வயது ஒலிம்பிக் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் நேற்று சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் தலைமையகத்துக்கு வந்திருந்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் மூத்த விளையாட்டுச் செய்தியாளர்களான ரோஹிட் பிரிஜ்நாத், சான் யுஜின் இருவரும் முதல் நூலை எழுதியிருந்தனர். இந்த நூலின் 23 சிறப்புப் பிரதியின் விற்பனை மூலம் $28,000 திரண்டது. இரண்டாவது நூலான 'கிட் டு கிங்' நூலை அந்நாளிதழின் செய்தி ஆசிரியர் மார்க் லிம் எழுதியிருந்தார். இந்த நூலின் சில பகுதிகளை 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதி'யின் 20 பிள்ளைகளுக்குப் படித்துக் காட்டினார் ஜோசஃப். இந்த இரு நூல்களின் விற்பனை மூலம் திரட்டப்பட்ட தொகையிலிருந்து 20 விழுக்காட்டு நிதி, 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதி'க்கு வழங்கப்பட்டது.
நூல்களில் கையெழுத்தி டுகிறார் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: சாவ் பாவ்