லண்டன்: மிடல்ஸ்பரோ குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலின் முதலிடத்துக்கு செல்சி முன்னேறியுள்ளது. இடைவேளைக்கு ஏறத்தாழ நான்கு நிமிடங்கள் இருக்கும் போது செல்சியின் டியேகோ கோஸ்டா அனுப்பிய பந்து மிடல்ஸ்பரோ கோல்காப்பாளரை மின்னல் வேகத்தில் கடந்து சென்று வலையைத் தொட்டது. இ டை வே ளை யி ன் போ து செல்சி 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் ஆட்டத்தைச் சமன் செய்ய மிடல்ஸ்பரோ குழு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதி வரை அதனால் கோல் போட முடியாமல் போனது. முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட செல்சி வாகை சூடி மூன்று புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் 28 புள்ளிகளுடன் பட்டியலில் செல்சி முன்னிலை வகிக்கிறது.
செல்சியின் முதல் கோலைப் போட்ட டியேகோ கோஸ்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்