‘ரூபாய்’

'சாட்டை' படத்தை அடுத்து 'ரூபாய்' என்ற புதிய படைப்புடன் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார் இயக்குநர் அன்பழகன். இதுவும் சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துடன் வெளிவருகிறது. அதேசமயம் வணிகப் படத் துக்குத் தேவையான சில அம்சங் களையும் சேர்த்துள்ளாராம். இனி அன்பழகன் சொல்வதைக் கேட்போம்.

"பணம் என்பது எல்லோரது குணத்தையும் மாற்றும். இந்த உலகத்தையே ஆளும். பொழுது விடிந்து, பின்னர் இரவு தூங் கும் வரை எல்லோருடைய தேட லும் தேவையும் பணமாகவே உள்ளது. அப்படி எல்லாம் என்று சொல்லிவிட்டு, கண நேரம் யோசித்து அதன் பிறகு... 'ஆமாம்... உண்மைதான்' என சொல்பவர்களே அதிகம். "சாட்டை' படம் கல்வித்துறை மீது வைத்த சாட்டையடியாகவே இருந்தது.

'சுர்'ரென உறைத்து, அதனால் திருந்தியவர்கள் அநேகம் பேர். தங்களது மன இறுக்கத்தை குறைத்துக் கொண்டவர்கள் நிறைய பேர். "இந்த 'ரூபாய்' படத்தில் கருத்தோடு, வணிக அம்சங்களும் கலந்து இருக்கும். மக்கள் சந்தோசமாக பார்த்து ரசிக்கும் சினிமாவாக உருவாக்கியுள்ளேன். சீக்கிரமே உங்களைத் திண்டாட விடாமல் இந்த 'ரூபாய்' புழக்கத் திற்கு வரும். "சாட்டை'யில் கல்வியின் தரம் தெரிந்தது. 'ரூபாய்' என்ன சொல்லப் போகிறது?

'ரூபாய்' படத்தின் ஒரு காட்சியில் சந்திரன், ஆனந்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!