டிசம்பர் 9ல் வெளியாகும் ‘சென்னை 28’ இரண்டாம் பாகம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சென்னை 28' இரண்டாம் பாகம் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ஜெய், 'மிர்ச்சி' சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜயலட்சுமி, மஹத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை வெங்கட் பிரபுவே தயாரித்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, நவம்பர் 10ஆம் தேதி வெளியீடு என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடிய சற்றே தாமதமாகிவிட்டது. இதையடுத்து, அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றது. அதன்பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் தற்போது டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!