எஸ்.பி.பாலாவுக்கு சாதனையாளர் விருது

கோவாவில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு உயரிய விருது வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40,000 பாடல்களுக்கும் மேலாகப் பாடி சாதனை படைத்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவ்விழாவில் பேசிய எஸ்.பி.பாலா, தனக்கு கிடைத்த விருதை தனது தாயாருக்கும் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார். “இந்த விருது நாட்டின் எல்லையில் உள்ள அனைவருக்கும் சொந்தம். இதை உங்களுக்குப் பெருமிதத்துடன் பணிவான முறையில் சமர்ப்பிக்கிறேன். “இன்றும் திரைப்படத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது பெற்றோர், என்னை அறிமுகம் செய்த குரு, பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் எனது நன்றி,” என்றார் எஸ்.பி.பாலா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்