சென்னை: அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திட உணவு வழங்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா 59 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக இட்லி சாப்பிட்டதாக மருத்துவர்கள் கூறினர். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற் பட்டதால் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி. கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரும் முதல் வருக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது சிறப்பு அறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பெண் நிபுணர் ஒருவர் 'பிசியோதெரபி' சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கிடையே முதல்வரின் உடல்நிலைப் பற்றி விவரம் தெரிவித்த மருத்துவர்கள், "முதல் வர் ஓரளவு இயற்கையாக சுவாசிப் பதால் அவருக்குப் பொருத்தப் பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுள்ளன," என்று கூறினர். ஆனால், அவரது தொண்டைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'டிரக்கியோடமி' குழாய் மட்டும் அவசரத் தேவைக்கு வைக்கப்பட்டு உள்ளது," என்று கூறினர்.