போராடித் தோற்ற சிங்கப்பூர்

மணிலா: சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தாய் லாந்துக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியைத் தழுவியது. தாய்லாந்தின் மின்னல் வேக ஆட்டக்காரர்கள் தனது பெனால்டி எல்லைக்குள் ஊடுருவாதிருக்க சிங்கப்பூர் தற்காப்பில் அதிகக் கவனம் செலுத்தியது.

குறைந்தது ஆறு வீரர்களைக் கொண்ட தற்காப்புச் சுவரை அது எழுப்பி தாய்லாந்தின் தொடர் தாக்குதல்களை முறியடித்தது. அவ்வப்போது வாய்ப்புக் கிடைக்கும்போது சிங்கப்பூர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு தாய்லாந் தின் பெனால்டி எல்லையைச் சற்று எட்டிப் பார்த்தது.

சிங்கப்பூரின் பெனால்டி எல்லையை நோக்கி விரையும் தாய்லாந்தின் சராக் யூயெனிடமிருந்து பந்தைப் பறிக்க முயற்சி செய்யும் சிங்கப்பூரின் அனுமந்தன் (இடது), ஹாரிஸ் ஹருண். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்