அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் ஜோசஃப் ஸ்கூலிங் சிங்கப்பூருக்காகத் தங்கம் வென் றார். இனி 100 மீட்டர் வண்ணத் துப்பூச்சி பாணி போட்டியில் உலகச் சாதனை நேரத்தை முறிய டிப்பதே தமது அடுத்த இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.
"அடுத்த ஆண்டு புடாபெஸ்ட் நகரில் ஃபினா உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் உலகச் சாதனை நேரத்தை முறியடிக்க முயற்சி செய்யப் போகிறேன். எனது பல இலட்சியங்களில் இதுவும் ஒன்று," என்று ஸ்கூலிங் நேற்று கூறினார்.