தனிநபர் சொத்து 1.4% அதிகரிப்பு

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் குடும்ப சொத்து அளவு கோலில் சிங்கப்பூர் 10ஆம் இடத் தில் உள்ளது. இதுவே கடந்த ஆண்டில் எட்டாவது இடமாக இருந்தது. ஆனால், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூர் முதலாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

கிரெடிட் சுவிஸ் ஆய்வுக் கழகம் நடத்திய இந்த ஆய்வில் இவ்வாண்டு சிங்கப்பூரிலுள்ள தனிநபர் சொத்து 1.4% உயர்ந்து அமெரிக்க டாலர் 277,000ஆக (S$ 394,000) உள்ளதாகக் கூறியது.

உயர் சேமிப்பு, சொத்து மதிப்பு உயர்வு, 2005ஆம் ஆண்டி லிருந்து 2012ஆம் ஆண்டுவரையில் சிங்கப்பூர் நாணய மதிப்பில் ஏற்பட் டுள்ள உயர்வு ஆகியவற்றால் 2000ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை ஆண்டு அடிப்படையில் 6% வளர்ச்சிக்கு இது ஈடாகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.