சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப் படும் நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு அனைத்து சேவை களையும் ஒருசேர வழங்கும் புதிய அமைப்பு ஒன்று நேற்று ஏற் படுத்தப்பட்டது. எஸ்ஜிஇன்னோவேட் எனப் பெயர்கொண்ட இந்த அமைப்பு தொழில்முனைவர்களுக்கு, தொழில் துறையில் ஆலோசனை வழங்குவோர், புதிதாக தொடங் கப்படும் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வோர், ஆராய்ச்சியில் திறன் பெற்று விளங்குவோர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தில் புத்தாக்க முயற்சி களையும் மனித இயந்திரத் துறையையும் வளர்க்கும் நோக்கத்துடன் $4.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இந்த அமைப்பு ஏற் படுத்தப்பட்டுள்ளது. இது மின்னிலக்க பயன்பாடு, நிதிச் சேவைகள், விவேக எரி சக்தி பயன்பாடு, மின்னிலக்க தயாரிப்புத் துறை, மனித இயந் திரத் துறை போன்றவற்றில் கவனம் செலுத்தும்.2016-11-23 06:00:00 +0800
எஸ்ஜிஇன்னோவேட் அமைப்பின் அறிமுக நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட துணைப் பிரதமரும் பொருளியல், சமுதாயக் கொள்கைளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் அமைப்பை உருவாக்க உதவிய பங்குதாரர்களுடன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்