வழக்கம்போல அதிமுக வெற்றி

இடைத்தேர்தல் நடந்தால் அதில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்பது தமிழகத்தில் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் வழக்கம். அதற்கேற்ப நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் ஆளும் அதிமுகவே வாகை சூடி உள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுக கூட்டணியின் பலம் 136 ஆக உயரும் அதே நேரம் திமுக கூட்டணியின் பலம் 98 என்பது மாற்றமின்றி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தஞ்சையிலும் அரவக் குறிச்சியிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்ததைக் காரணம் காட்டி அந்த இரு தொகுதிகளின் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கும் முன்னரே உயிரிழந்தார். அதனால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற ஆசைப்பட்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சி யது. அதனை அதிமுகவினர் இவ்வாறு படம் வரைந்து கேலி செய்தனர். படம்: தமிழக தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!