பிராஸ் பாசா சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த கார் விபத்தில் சாலையோர நடை பாதையில் இருந்த பல்வேறு மின்கம்பங் கள் அடியோடு சாய்ந்தன. ஆவ்டி கார் ஒன்று அச்சேதங்களை ஏற்படுத்தி இருந் ததை காலை 7.50 மணியளவில் தாம் கண்டதாக டேவிட் டிங், 43, என்பவர் கூறினார்.
அண்மையில் புதுப்பிக்கப்பட்டு ஞாயிறன்று திறக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் ஒன்றுக்கு வெளியே நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் ஆவ்டி காரோட்டி யான 31 வயது ஆடவர் கைது செய்யப் பட்டார். அவர் குடிபோதையில் இருந்த தாக சந்தேகிக்கப்படுவதாக போலிசார் தெரிவித்தனர்.
நடைபாதை மீது பாய்ந்த ஆவ்டி காரும் அங்கிருந்த மின் கம்பங்களும் சேதமுற்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்