கட்டான தேகத்தைப் பெற உடற் பயிற்சிக் கூடங்களுக்குச் செல் வதும் பொலிவான தோற்றத்தைப் பெற காய்கறிகள், பழங்கள் உண்பதும் உயர்கல்வி நிலையங் களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோரின் பழக்கங் களில் சில. ஆரோக்கியமான உணவு களின் விலை அதிகம்; அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை; உடற்பயிற்சி, யோகா செய் வதற்கு நேரம் கிடைப்பதில்லை; மேற்கண்டவற்றை ஆரோக் கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க இயலாததற்கான காரணங்களாக சில இளையர்கள் கூறினாலும் சரியான திட்டமிடல் மூலம் நலம் பேணமுடியும் என்பது வேறு சில இளையரின் கருத்து. நீரிழிவு எனும் உடலின் நிலைப்பாட்டால் முக்கிய உள் ளுறுப்புகளான சிறுநீரகம், இதயம் இவற்றின் செயல்பாடுகள் பாதிக் கப்படுவதுடன் பார்வை மங்கல், காது கேளாமை போன்ற பிரச் சினைகளும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுகாதார மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்த ஆரோக்கியமான ரொட்டி 'சாண்ட்விச்' ஒன்றைச் செய்வதற்கான போட்டியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். தம் குழுவினரோடு இணைந்து 'சாண்ட்விச்'சுக்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்ட டில்ஃபர் நிஷா (வலமிருந்து இரண்டாவது). படம்: சுகாதார மேம்பாட்டு வாரியம்