80 உணவுக் கடைகளுக்கு மரபுடைமை நாயகர்கள் விருது

இந்த ஆண்டு 80க்கும் அதிகமான ரொட்டி தயாரிப்பு நிறுவனங்கள், உணவு அங்காடி நிலையக் கடை கள், உணவகங்கள் ஆகிய வற்றுக்கு மரபுடைமை நாயகர்கள் விருதுகள் (Heritage Heroes Awards) வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் உணவுப் பாரம் பரியத்தைப் பாதுகாத்துத் தொட ரும் உணவகங்களை இந்த விருது கௌரவித்து வருகிறது. மூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருது களுக்கான உணவகப் பட்டிய லுக்கு ‘ஸ்லோ ஃபூட்’ சிங்கப்பூர் எனும் லாப நோக்கமற்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பு இத்தாலியில் உள்ள நஸ்லோ ஃபூட்’ இன்டர்நேஷனல் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவாகும். இந்த அமைப்பு 1989ஆம் ஆண்டில் கார்லோ பெட்ரினி எனும் இத்தாலிய செய்தியாளரால் நிறுவப்பட்டது.

மரபுடைமை நாயகர்கள் விருதுக்கு அடையாளம் காணப்பட்டுள்ள உணவகங்களில் (இடமிருந்து) நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள இஸ்லாமிக் உணவகம், அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் உள்ள ஸ்பிரிங் கோர்ட் உணவகம், சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகம் ஆகியவை அடங்கும். படம்: சிஇஎஃப் எம்இஎல், ஸ்பிரிங் கோர்ட், ஆனந்த பவன்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்