‘தேவநகரி எழுத்துகளுடைய ரூ.2000 சட்டவிரோதமானது’

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் அச்சிடப்பட்டுள்ளதற்கு விளக்கம் தருமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் தேவநகரி மொழி எண் வடிவத்தைக் குறிப்பிடலாமா என்பது தொடர்பாக மத்திய அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க மத்திய அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அக்ரி கே.பி.டி.கணேசன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அண்மையில் பண மதிப்பு நீக்கம் செய்வதாக அறிவித்தது. பின்னர் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் அனைத்துலக அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்குப் பதில், தேவநகரி வடிவத்தில் எண்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் ரூபாய் நோட்டு களிலும், அரசு உத்தரவுகள், அறிவிப்புகளிலும் எண்களைப் பொறுத்தவரை அனைத்துலக அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எண் வடிவத்தைப் பயன் படுத்தினால் அதற்கு நாடாளு மன்றத்தில் சட்டம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் நிறைவேற்றாத நிலையில் அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஆட்சி மொழிகள் சட்டம் அனுமதிக்காத தேவநகரி எழுத்து வடிவத்தை 2000 ரூபாய் நோட்டில் பயன்படுத்தியது சட்டவிரோதம். இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபாய் நோட்டில் தேவநகரி மொழி எண்கள் வடி வத்தை அச்சிடுவதற்கு வழியுள் ளதா என மத்திய அரசு வழக் கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசிடம் தகவல் பெற்று இன்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!