தோக்கியோ: ஜப்பானின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளை நேற்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அந் நாட்டு புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நில நடுக்கத்தின் விளைவாக கடலில் எழும்பிய பேரலைகள் ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தை பாதிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் கடலோரப் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சனோசி ஆற்றில் எழும்பிய பேரலை. படம்: ராய்ட்டர்ஸ்