சாம்சுங் நிறுவன அலுவலகத்தில் சோதனை

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹையின் நெருங்கிய தோழி தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சுங்’ மின்னியல் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் அந்நாட்டு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் அரசுக்குச் சொந்தமான ஓய்வு ஊதியத்துறை அலுவலகங்களிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனை தொடர்பான எந்தத் தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. எனினும் சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.