கெமர் ரூஜ் தலைவர்களுக்கு தண்டனை உறுதியானது

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த இரண்டு முன்னாள் கெமர் ரூஜ் தலைவர் களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையைக் கம்போடியாவின் ஐநா ஆதரவுபெற்ற நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இனப் படுகொலைக்காக இரண்டாவது வழக்கை எதிர்நோக்கும் இருவரும் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நீதிமன்றத் தீர்மானம் அந்த எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கியது.

1975க்கும் 1979க்கும் இடை யில் இரண்டு மில்லியன் கம்போடியர்கள் வரை மரண மடையக் காரணமாக இருந்த கெமர் ரூஜ் ஆட்சியின் "இரண்டாம் சகோதரர்" நுவோன் சியா (வயது 90), முன்னாள் அதிபர் கியூ சம்பான் (வயது 85) இருவருக்கும் 2014ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முதன்முதலாகத் தண்டனை விதிக்கப்பட்ட கெமர் ரூஜ் உயர் தலைவர்கள் இவர்கள். இருவரும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!