கோலாலம்பூர்: மலேசியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி மகளிர் குழுக்கள் நேற்று பாடாங் மெர்போக்கிலிருந்து நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். பல்வேறு மகளிர் அமைப்பு களைச் சேர்ந்த அவர்கள் கருப்பு நிறச் சட்டை , பெர்சேயின் மஞ்சள் நிற ஆடை அணிந்து காலை 10.45 மணிக்கு நடைப் பயணத்தைத் தொடங்கி 20 நிமிடங்களில் நாடாளுமன்றக் கட்டடத்தை சென்றடைந்தனர்.
தேசிய மனித உரிமைக் கழகத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பெர்சே இயக்கக் குழு உறுப் பினர் ஐவி ஜோசையா ஆகி யோரும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மரியா சின்னின் சகோதரி சிந்தியா சின், தன் குடும்பமே அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறி னார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கூரி மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்