நியூயார்க்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டோனல்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளில் வெளிப்பட்ட கடும்போக்கினை அவர் தற்போது தளர்த்திக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பாரிஸ் பருவநிலை உடன் பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திரு டிரம்ப், அதுகுறித்த தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
உலகப் பருவநிலை ஒப்பந்தங் களிலிருந்து விலகிக்கொள்வது பற்றி பரந்த எண்ணம் கொண் டிருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். அதோடு உலகின் வெப்பத்திற்கும் மனிதனின் செயல்பாடுகளுக்கும் இடையில் ஏதோ ஒரு வகையான தொடர்பிருக்கக்கூடும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். "ஒரு வகையான தொடர்பிருப்பதாக நான் நினைக்கிறேன். ஏதோ ஒன்று. எவ்வளவு என்பதைப் பொறுத்தது," என்று நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் குழுவிடம் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்களை சந்தித்துப் பேசிய பின்னர் அங்கிருந்து செல்கிறார். கடந்த சில நாட்களாக திரு டிரம்ப், ஊடகத் துறை நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார். படம்: ஏஎஃப்பி