பாரிஸ்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான லெஸ்டரின் இந்த ஆண்டுக் கனவுப் பயணம் தொடர்கிறது. முதல் முறையாக வெற்றியாளர் கிண்ணப் போட்டி யில் பங்குபெறும் அது நேற்று அதிகாலை பெல்ஜியத்தின் கிளப் புருக குழுவை இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் தோற் கடித்து கடைசி 16 குழுக்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. லெஸ்டருடன் யுவெண்டஸ், பாயர் லெவகுசன், மெனாக்கோ ஆகிய குழுக்களும் கடைசி 16 குழுக்கள் பட்டியலில் இடம் பிடித் தன. அந்தப் பட்டியலில் அத்லெடிகோ மெட்ரிட், ஆர்சனல், பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன், பாயர்ன் முனிக், பொருசியா டோர்ட்மண்ட் ஆகியவையும் ஏற் கெனவே இடம்பிடித்துவிட்டன. லெஸ்டர் மகிழ்ச்சியில் திளைத் தாலும் மற்றொரு இங்கிலீஷ் குழு வான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் கடைசி 16 குழுக்கள் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறியது.
லெஸ்டரின் முதல் கோலைப் புகுத்திய மகிழ்ச்சி யில் ஷின்ஜி ஓகாசாகி (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்