ஜெயலலிதா: மக்கள் என் பக்கம் உள்ளனர்

சென்னை: மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தவர் களுக்கு முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெய லலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனை யில் உடல் நலம் தேறி வரும் நிலையில் தேர்தல் வெற்றி தமக்கு உற்சாகத்தை அளித் துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து பல்வேறு கட்சித் தலை வர்களும் கருத்து தெரிவித்துள் ளனர். “மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் எனக்கு நீங் கள் வழங்கியிருக்கும் இந்தத் தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியையும், உற்சாகத்தை யும் அளித்துள்ளது. இந்த வெற்றி மூலம் மக்கள் என் பக் கம் என்பது மீண்டும் நிரூபிக் கப்பட்டுள்ளது. “உங்களுடைய எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப என்னுடைய பணிகள் எப்பொழுதும்போல் சிறப்புடன் தொடரும். நான் விரைவில் பூரண நலம்பெற வேண்டி அதிமுகவினரும், தமிழக மக்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறீர்கள் என்பதையும் பலர் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்து செல் கிறீர்கள் என்பதையும் நன்கு அறிவேன்,” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்