திரையுலகின் ஜாம்பவான்கள் எனப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் 1980ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களில் நடித்தனர். அவர்களுக்குள் பலத்த, அதே சமயம் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ரசிகர் களுக்கு இடையேயும் அவ்வப்போது மோதல்கள் வெடித்தன. இதை மையமாக வைத்து தற்போது உருவா கும் புதிய படம் 'எங்கிட்டே மோதாதே'. இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமு செல்லப்பா இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நட்ராஜ், ராஜாஜி இருவரும் ரஜினி, கமல் ரசிகர்க ளாக நடிக்கிறார்கள். சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் இருவரும் கதாநாயகிகள். அண்மையில் இப்படத் தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இப்படத்தில் நட்ராஜ் சொந்தக் குரலில் ஒரு பாட்டு பாடியிருக்கிறாராம். "இந்தப் படம் இன்னொரு 'சுப்பிரமணியபுரம்' என்று சொல்வேன். படத்தின் கதையைக் கேட்டு அசந்துவிட்டேன்," என இயக்குநர் பாண்டிராஜ் பாராட்டியுள்ளார்.