'அஞ்சுக்கு ஒண்ணு' படத்தை வெளியிட அப்படக்குழுவினர் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகி றார்கள். ஆர்வியார் இயக்கியுள்ள இப்படம் எதிர்பார்த்தபடியே சிறப் பாக உருவாகி இருக்கிறதாம். "எனது சொந்த ஊரு ஜெயங்கொண்டம். சினிமா மேலே பெரிய ஈர்ப்பு இருந்தது. ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத் தில் வேலை பார்த்தபோது நிறைய கற்றுக் கொண்டேன்.p "பிரபல இயக்குநர்களோடு பழகி சினிமாவை நன்றாகப் புரிந்துகொண்டேன். அந்த அனுபவத்தையெல்லாம் மொத்த மாகப் பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளேன்." தலைப்பே வித்தியாசமாக உள்ளதே?
"தலைப்பைப் பார்த்து சூதாட்டக் கதையா என்று கூட சிலர் கேட்டனர். ஐந்து நண்பர்கள் ஒரே இடத்தில் தங்கி கொத்தனார் வேலை பார்க்கிறார்கள். அங்கே சித்தாளாக வேலை பார்க்கும் நாயகி மீது ஐவருக்கும் காதல் மலர்கிறது. நாயகியை அடைய வேண்டும் என இளமை வேகத்தில் துடிக்கிறார்கள். "இந்த தீராத விளையாட்டுப் பிள்ளைகளை சித்தாள் நாயகி ஒற்றை ஆளாக எப்படிச் சமாளிக் கிறார் என்பதுதான் படம். நாங் கள் நினைத்த மாதிரியே திருப்தி கரமான கதையாகவும் படமாகவும் உருவாகி உள்ளது."
'அஞ்சுக்கு ஒண்ணு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.