கடும் சரிவில் இந்திய ரூபாயின் மதிப்பு

இந்தியாவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு மீட்டுக்கொண்டதை அடுத்து அங்கு கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டு இரு வாரங் களுக்கு மேலான போதும் பணத் தட்டுப்பாட்டு நிலை இன்னும் சீராகவில்லை. மேலும், அமெரிக்க பங்குச் சந்தை உச்சம் பெற்றுள்ள தால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இவற்றின் காரணமாக அனைத்துலக அந்நியச் செலா வணிச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது.

நேற்று பிற்பகல் நிலவரப்படி ரூபாயின் மதிப்பு 2.5 விழுக்காட்டுக்கு மேல் சரிந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.8650 என்ற நிலையை எட்டியது. இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.8450 ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. அடுத்த 3 மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 70.50 என்ற நிலையை எட்டவும் வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நேற்று இந்திய பங்குச் சந்தைக் குறியீடு 0.7 விழுக்காடு சரிந்தது. இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு முதலீடுகள், நிறுவனப் பங்குகள் நவம்பர் மாதத்தில் $2.03 பில்லியன் குறைந்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!