1.93 கோடி பேருக்கு மின் கட்டண விலக்கு

தமிழக அரசு அறிவித்த மின் கட்டண சலுகையால் சுமார் 1.93 கோடி மக்கள் பயனடைந்திருப்பதாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. வீடுகளில் இரு மாதங் களுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் இலவச மின்சார சலுகை காரணமாக தமிழகம் முழு வதும் 78.55 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள் ளனர். கைத்தறி நெசவாளர் களுக்கு ஏற்கெனவே இருந்த இலவச அளவான 100 யூனிட்டை 200 யூனிட்டுகளாக உயர்த்தியது, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மாக இருந்த 500 யூனிட்டை 750 யூனிட்டுகளாக உயர்த் தியது ஆகிய திட்டங் களினால் சுமார் 1.93 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அவ்வறிக்கை குறிப்பிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்