சிங்கப்பூருக்கும் நெதர்லாந்து நாட்டிற்கும் இடையில் வலுவான உறவு நிலவுவதை இரு நாட்டு தலைவர்களும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ஒரு நாள் வருகை மேற் கொண்டு சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று சந்தித்தார். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் வின்சிமஸ், 1961 முதல் 1984 வரை சிங்கப்பூர் அரசாங்கத் தின் தலைமை பொருளியல் ஆலோசகராக இருந்தார். சிங்கப் பூரும் நெதர்லாந்தும் தண்ணீர் நிர்வாகத்தில் ஒத்துழைக்கின்றன.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் (இடது) சிங்கப்பூரில் இஸ்தானா வில் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தார்.