சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை அரசாங்கம் குறைத்திருக்கிறது. இந்த ஆண்டு பொருளியல் 1 முதல் 2% வரை வளரும் என்று ஏற்கெனவே அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அந்த வளர்ச்சி 1 முதல் 1.5% வரைதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. என்றாலும் அடுத்த ஆண்டின் வளர்ச்சி 3% வரை இருக்கக்கூடும் என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது-. ஆகப் புதிய சிங்கப்பூர் பொருளியல் ஆய்வு அறிக்கையை அமைச்சு நேற்று வெளியிட்டது. சென்ற ஆண்டு மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் பொருளியல் 1.1% வளர்ந்ததாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. இது முன்பு முன்னுரைக்கப்பட்ட வளர்ச்சி அளவைவிட 0.6% அதிகம். பொருளியல் ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலத்தில் 2% சுருங்கியது.
சிங்கப்பூரின் மத்திய வணிக வட்டாரம். சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டில் 1-1.5%தான் வளரும் என்று வர்த்தக தொழில் அமைச்சு இப்போது அறிவித்து இருக்கிறது. ஏற்றுமதிகள் தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளியல் நிச்சயமில்லாத நிலையில் இருக்கிறது. கோப்புப்படம்