உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் சம்பளச்சீட்டில் உள்ள விவரங்கள் குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம், புரியாத விவரங்களை உங்களுக்காக எளிமைப்படுத்தி உதவுகிறது மனிதவள அமைச்சு. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், சிங்கப்பூர் முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு வகைப்படுத்தப் பட்ட சம்பளச்சீட்டுகளைத் தர வேண்டும் என்ற சட்டம் இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் நடப்புக்கு வந்தது. அதோடு, சம்பளச்சீட்டுகளில் முக்கிய வேலை நியமன நிபந்தனை களும் இடம்பெறவேண்டும். வேலை தொடங்கிய தேதி, வேலை நேரம், ஓய்வு நேரம், சம்பளம், செலவுத்தொகை போன்றவை இதில் உள்ளடங்கும். இந்தச் சட்டத்தைத் தொழிலாளர் கள் வரவேற்பதாகத் தேசிய தொழிற் சங்கக் காங்கிரசின் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆங் ஹின் கீ கூறினார்.

‘மிஸ்டர் பீன்’ கடை. படம்: லியன்ஹ வான்பாவ்