யாஸ்மின் பேகம்
டிஸ்லெக்ஸியா என்னும் கற்றல் குறைபாட்டினால் அவதிப்படும் 12 வயது ஸ்ரீ ஜான், எழுத்துகளை வாசிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார். இவ்வாண்டின் தொடக்கத்தில் தேர்வில் சரியாக செய்யாததால் ஃபௌன்டெஷன் எனப்படும் அடித்தள கல்வி நிலைக்கு 12 வயது ஸ்ரீ ஜான் தள்ளப்பட்டபோது அவர் மிகவும் மனம் தளர்ந்தார்.
இருப்பினும் அவரது ஆசிரியரின் ஊக்கத்தாலும் தமது உழைப்பாலும் தமது குறைகளையே நிறைகளாக்கிக் கொண்டார் ஜான். தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில், 156 மதிப்பெண்கள் பெற்று, ஃபௌன்டெஷன் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்துள்ளார் டா சாவ் தொடக்கப்பள்ளி மாணவரான ஜான்.
சிறு வயது முதல் தமது தாத்தா பாட்டியிடம் வளர்ந்த ஸ்ரீ ஜான், டிஸ்லெக்ஸியா எனும் கற்றல் குறைபாடு இருந்தபோதும், ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தாரின் ஆதரவுடன் தேர்வில் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக்ச் செய்துள்ளார். படத்தில் அவரது தேர்வு முடிவுகளைக் கண்டு பெருமைப்படும் தாத்தா(இடது), பாட்டி மற்றும் அக்கா. படம்: திமத்தி டேவிட்