பெய்ஜிங்: சீனாவில் அரை குறை யாகக் கட்டப்பட்டிருந்த கட்டடத் தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த தில் 67 பேர் இறந்துவிட்டனர். நேற்று விடியற்காலை மின்சக்தி நிலையத்தில் குளிரூட்டும் கோபுரத்தின் மேடை சரிந்துவிட்டது என்றும் இதில் பலர் இறந்து விட்டனர் என்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. சிசிடிவி ஒளிபரப்பிய செய்தியில் மொத்தம் 67 பேர் வரை இறந்துவிட்டதாகத் தெரி விக்கப்பட்டது. இன்னமும் ஒருவரைக் காண வில்லை என்றும் இருவர் காயம் அடைந்தனர் என்றும் அது கூறியது.
சீனாவில் கட்டி முடிக்கப்படாத கோபுரம் இடிந்து விழுந்ததில் 67 பேர் இறந்துவிட்டனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் ஹுபேயில் மின்சக்தி உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 கொல்லப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்