2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்கும் நெய்மார்

மட்ரிட்: பிரேசில் நாட்டு காற்பந்து நட்சத்திரமான நெய்மாருக்கு 2 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 15 மில்லியன் வெள்ளி அபராதமும் விதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டு அரசு வழக் கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளனர். பார்சிலோனா அணிக்கு மாறும் போது நடந்த ஊழல் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அந்த வழக்கு நேற்று ஸ்பானிய நீதி மன்றத்தில் விசாரிக் கப்பட்டது. அப்போது அரசு தரப்பு வழக் கறிஞர்கள் அவருக்குக் கூடுதல்ப ட்ச தண்டனை விதிக்கு மாறு நீதிமன்றத்திடம் பரிந் து ரைத் தனர். அதேபோல் பார்சி லோனா அணியின் முன்னாள் தலைவர் சேன்ட்ரோ ரசலுக்கு 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கும் படியும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்துள்ளனர். சேன்ட்ரோ ரசல் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் 2014ஆம் ஆண்டு பதவியில் இருந்து வில கினார். பார்சிலோனா அணியின் தற்போதைய தலைவர் ஜோசெப் மரியா பட்ரோமியூ மீதும் இந்த ஊழல் தொடர்பாகக் குற்றம் சாட் டப் பட்டிருந்தது. ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பிரேசில் நாட்டு காற்பந்தாட்ட வீரர் நெய்மார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!