தப்பிப் பிழைத்த மான்செஸ்டர் சிட்டி

மான்சன்கிளாட்பாக்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் நேற்று அதி காலை பொருசியா மான்சன் கிளாட்பாக் குழுவை எதிர்கொண்ட இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி குழு ஒருவழியாக தனது பங்குக்கு ஒரு கோல் போட்டு 1-=1 என்ற சமநிலையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு அந்தக் குழு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் 23ஆம் நிமிடத்தில் பொருசியாவின் ரஃபையல் கோல் எல்லைக்கு 15 மீட்டர் தூரத்திலிருந்து பலம் கொண்ட மட்டும் உதைத்த பந்து சிட்டி கோல்காப்பாளர் கிளோடியோ பிராவோவின் கைகளுக்கு எட் டாமல் வலைக்குள் புகுந்தது. எனினும், முதற்பாதி ஆட்டத் தின் கூடுதல் நேரத்தில் சிட்டியின் டாவிட் சில்வா சக வீரரான கெவின் டி பிரய்ன கொடுத்த பந்தை லாவகமாக பொருசியாவின் கோல் வலைக்குள் செலுத்தி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் பொருசியாவின் ஸ்டின்டல் ஆட்ட மைதானத்திலிருந்து வெளியேற்றப் பட்டதும் சிட்டியின் ஆட்டத்தில் முன்னேற்றம் தெரிந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் சிட்டியின் டாவிட் சில்வா அடித்த பந்தைத் தடுக்க முடியாமல் தவிக்கும் பொருசியா மான்சன்கிளாட்பாக் கோல்காப்பாளர் யான் சோமர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!