யங்கூன்: மியன்மாரில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்யா மக்களைத் துடைத் தொழிக்க மியன்மார் ராணுவம் விரும்புவதாக ஐநா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித் திருப்பதாக பிபிசி தகவல் கூறுகிறது. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் பலரை ராணுவத்தினர் கொன்று குவித்து வருவதாகவும் இதனால் பலர் அங்கிருந்து பக்கத்து நாடான பங்ளாதேஷிற்கு தப்பி ஓடுவதாகவும் அகதிகளுக் கான ஐநா அமைப்பின் அதிகாரி ஜான் மெக்கிசிக் கூறியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் எல்லைக் காவலர்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடர்ந்து மியன்மார் அரசாங்கம் தீவிரவாதி களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இந்தோனீசியாவில் உள்ள மியன்மார் தூதரகத்திற்கு வெளியே இந்தோனீசியர்கள் பேரணி நடத்தினர். ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக மலேசியாவிலும் ஆர்ப்பாட்ட்டம் நடந்தது. படம்: ஏஎஃப்பி