இஸ்ரேலில் காட்டுத் தீ: 80,000 பேர் வெளியேற்றம்

ஜெருசலம்: இஸ்ரேலில் ஹைஃபா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப் பாளர்கள் போராடி வரும் வேளை யில் அப்பகுதியிலிருந்து சுமார் 80,000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இஸ்ரேலின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான ஹைஃபா ஜெருசலம் அருகே மேற்குக் கரையில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக இங்கு கடும் வறட்சி நிலவுகிறது. அதைத் தொடர்ந்து ஹைஃபா நகரை ஒட்டி யுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாகப் பரவி நகரப் பகுதிக்குள்ளும் பரவியது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஹைஃபா நகரில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் வசிக்கும் ஆயிரக் கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதற் கிடையே அங்கு பெரும்பாலான வீடுகளில் மின்சார விநியோகம் தடைபட்டது.

இஸ்ரேலில் ஹைஃபா பகுதியில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!