சுசுகி கிண்ணத்தில் தொடர மலேசியா முடிவு

கோலாலம்பூர்: சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தொடர்ந்து விளையாட மலேசியா முடிவு எடுத்துள்ளதாக அந்நாட்டின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறி வித்துள்ளார். மியன்மாரில் சிறுபான்மை ரொஹிங்யா இனத்தவர்களுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவம் வன்முறையைக் கையாண்டு வரு வதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து விலக மலேசியா பரிசீலனை செய்து வருவதாக திரு கைரி சில தினங்களுக்கு முன் தெரிவித் திருந்தார்.

போட்டியிலிருந்து மலேசியா விலகியிருந்தால் ஆசியான் உறுப்பியம் கொண்ட மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று நீண்ட காலமாக நடப்பில் இருந்து வரும் கொள்கை மீறப்பட்டிருக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்